கற்பகச்சோலை உற்பத்தி தொகுதியை யாழில் திறப்பு!
 Wednesday, April 12th, 2017
        
                    Wednesday, April 12th, 2017
            
கற்பகச்சோலை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொகுதியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழில் திறந்து வைத்துள்ளார்.
பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில், தலைவர் தலைமையில் இன்று காலை யாழ்.ஸ்ரான்லி வீதியில் குறித்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பனை அபிவிருத்திச் சபையின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தும் குறித்த சந்தைப்படுத்தல் நிலையத்தில், உற்பத்தி செய்யப்படும் உணவுகளையும் பார்வையிட்டதுடன், உற்பத்தி பொருட்களையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, யாழ். மத்திய கல்லூரியில் பனைசார் உற்பத்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் கையளிக்கப்பட்டதுடன், “பொறாசஸ்” விஞ்ஞானப் பார்வையில் பனை வளம் எனும் தொனிப்பொருளிலான நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
Related posts:
2018 இல் ஆசியாவின் முதலாவது சுற்றுலாத்திட்டம்!
இலங்கையில் அதிகரித்துச் செல்கிறது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை - அரசாங்க தகவல் திணைக்களம்!
அரச - தனியார்துறை ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய ஊக்குவிக்க வேண்டும் – கல்வி அமைச்சர் தினேஷ் கு...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        