கருத்து வெளியிட முடியாது – அமெரிக்க தூதரகம் !
Wednesday, July 5th, 2017
புலனாய்வு விவகாரங்கள் தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
விமானம் ஒன்றைக் கடத்தி கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க தூதரகத்தின் கருத்தை அறிந்து கொள்வதற்கு கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று முற்பட்ட போதே புலனாய்வு விவகாரங்கள் தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் எந்த அடிப்படையும் அற்றவை என்று அரச புலனாய்வு வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகத்திடம் கூறியுள்ளன. மேற்படி ஊடகச் செய்தி தொடர்பாக விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
Related posts:
|
|
|


