கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிப்பு – குளத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களை மிக அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்து!
Tuesday, November 1st, 2022
தற்போது பெய்தவரும் கனமழை காரணமாக கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்துவருகின்றது. இதன்காரணமாக குளத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களை மிக அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக கனகாம்பிகை குளத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் இரத்தினபுரம் ஆனந்தபுரம் மக்கள் மிக அவதானமாக இருப்பதுடன், வெள்ளம் ஏற்படாத வகையில் அருகில் உள்ள கழிவுக்கால்வாய்களை சுத்தம் செய்து நீர் வழிந்தோட கூடிய வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை தொடர்ச்சியாக மழை பெய்யும் ஆக இருந்தால் கனகாம்பிகை குளம் வான் பாய்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதனால் பரந்தன் உமையாள்புரம் பகுதிகளில் வாழ்கின்ற மக்களும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி நியமனம்!
தேசிய அடையாள அட்டையைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
வீதி விபத்துக்களை மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை - எச்சரிக்கையுடன் செயற்படுமா...
|
|
|


