கந்தானை தீப்பரவல் – சுவாசப் பாதிப்பினால் 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
Tuesday, August 8th, 2023
கந்தானை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து புகை காரணமாக ஏற்பட்ட சுவாசக்கோளாறினால் 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கந்தானை புனித செபஸ்தியார் கல்லூரி மாணவிகளே இவ்வாறு அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், தீப்பரவலுக்கான உரிய காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என கந்தானை காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உரிமை கோரப்படாத பெருந்தொகை பணம் அரசுடைமை!
போராட்டக்காரர்களை வெளியேற்ற பாதுகாப்புப் படைகள் : நாட்டின் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க த...
நிலநடுக்கத்திற்குப் பின்னர் 5 மீற்றர் நகர்ந்த துருக்கி - அறிவியலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
|
|
|


