கத்தோலிக்க மக்களின் புனித பூமியாகிறது மடு!
Wednesday, August 1st, 2018
மன்னார் மடுப் பகுதியை கத்தோலிக்கர்களின் புனித பூமியாக அறிவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்றது.
மன்னார் மடுமாதா ஆலயம் அமைந்துள்ள மடுப்பகுதியை கத்தோலிக்கர்களின் புனித பூமியாக அறிவிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்தார். அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மடுப்பிரதேசம் புனித பூமியாக அரசிதழ் ஊடாக அறிவிக்கப்படும். அதேவேளை மைத்திரிபால சிறிசேன கடந்த ஞாயிற்றுக்கிழமை மடுமாதா ஆலயத்துக்குப் பயணம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
Related posts:
நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக்கிரியைகள் இன்று!
மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிகாதீர் – இராணுவத்தளபதி!
இலங்கை போக்குவரத்து சபை - ரயில்வே திணைக்களத்தின் வருமானத்தில் வீழ்ச்சி !
|
|
|


