கண்ணீர் அஞ்சலி!
Wednesday, May 5th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் பவான் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.
இந்நிலையில் அன்னாரின் பிரிவுத்துயரில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் பங்கெடுத்துக் கொள்கின்றது.
தொண்டமானாற்றை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் ஜெயக்குமார் என்னும் இயற்பெயருடைய தோழர் பவான் நேற்று (04) முன்றிரவு உடல் நலக்குறைவு காரணமாக தனது 51ஆவது வயதில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் 1 மணிக்கு நாயன்மார் கட்டில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறுவதுடன் மாலை 3 மணியளவில் தொண்டமானாற்றிலுள்ள அன்னாரின் பூர்வீக இடத்தில் தகனம் செய்யப்படும்.
Related posts:
தேசிய பாதுகாப்பு நிதிய திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில்!
எடுத்திருக்கும் இலக்குகளை நோக்கி முன்னேற இப்புத்தாண்டு நல்ல தொடக்கமாக அமையட்டும்: EPDPNEWS.COM இணையத...
அடுத்த வாரம்முதல் பாடசாலை மாணவர்களுக்கு குறைந்த விலையில் அப்பியாசக் கொப்பிகள் - கல்வி அமைச்சு தீர்மா...
|
|
|




