கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் 42 பேர் தூக்கிலிடப்பட்டனர் – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிப்பு!

இலங்கையில், கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் வைத்து 42 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு, மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (18) இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 1959 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரையிலும் 31 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் 1969 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரையிலும் 42 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். அதற்கு பின்னர் இலங்கையில் மரண தண்டனை அமுலில் இல்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கும் தமிழ் அரசியல் கைதிகள்!
சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!
அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையை 61 ஆக அதிகரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்ச...
|
|