கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படுகின்றது?

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திருத்தப் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும். அந்தக் காலப் பகுதியில் சகல விமானங்களினதும் வருகைகளும் புறப்படல்களும் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையம் இவ்வாறு மூடப்படுவது ஸ்ரீலங்கன் விமான சேவைக்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் என்று விமான நிலையத் தொழிற்சங்கங்கள் தமது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சமூக ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த சதி – அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டி...
கொடுப்பனவு விவகாரம் - சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடல் இண...
|
|