கட்டிட புனரமைப்பு பணிகளை பூர்த்தி செய்வதற்கானநிதியுதவியினை பெற்றுத் தாருங்கள் – ஈ.பி.டி.பி கட்சியிடம் தலையாழி சனசமூக நிலைய நிர்வாகம் கோரிக்கை!

கொக்குவில் தலையாழி இந்திரா சனசமூக நிலையத்தின் கட்டிட புனரமைப்பு பணிகளை பூர்த்தி செய்வதற்கான நிதியுதவியினை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் தலையாழி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது நிதி ஒதுக்கிட்டின் மூலம் கடந்த வருடம் ஒரு தொகுதி நிதி வழங்கப்பட்டு குறித்த கட்டிடத்திற்கான நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தது.
இந்நிலையில் குறித்த கட்டிடத்திற்கான பணிகளை முழுமையடையச் செய்வதற்கு தற்போது மேலதிக நிதி தேவையாக உள்ளதால் அதற்கான நிதியுதவிகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் குறித்த சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றையதினம் குறித்த பகுதிக்கு நேரில் சென்று கட்டடத்தை பார்வையிட்ட அம்பலம் இரவிந்திரதாசன் நிலைமைகளை ஆராய்ந்து அறிந்துகொண்டதுடன் இதுதொடர்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது பார்வைக்கு கொண்டுசென்று கட்டட பணி பூரணப்படுத்தப்படுவதற்கான முயற்சிகளை மேதற்கொள்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|