கட்டாருடன் இலங்கை 07 உடன்படிக்கைகளில் கைச்சாத்து!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டாரிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் கட்டாரின் ஆட்சியாளர் தமீன் பின் அஹமட் அல் தானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது சகல துறைகளிலும் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துதல் தொடர்பாக கண்டறிய இருநாட்டு பிரதிநிதிகளையும் கொண்ட குழுவொன்றினை நியமித்து அச்செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்ல அரச தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள், மின்சக்தி, நீர் முகாமைத்துவம், சுகாதாரம் மற்றும் நிதி துறைகளில் காணப்படும் தொடர்புகளை மேம்படுத்தத்தக்க 07 புதிய உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்பட்டன. மேலும் இரு நாடுகளின் தூதுவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் விசேட கடவுச்சீட்டு உடையவர்கள் வீசா பெற்றுக்கொள்ளாது நாடுகளிற்கு உட்பிரவேசிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை முதலாவதாக கைச்சாத்திடப்பட்டது.
Related posts:
|
|