கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவித்த 20 இலங்கையர்களுக்கு விடுதலை – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

கட்டாரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
புனித ரமழானை முன்னிட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்த பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அபராத தொகை செலுத்தலில் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர்!
பறி போகுமா பொன்சேகாவின் பதவி
பெறுமதி மிக்க வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இருவர் கைது!
|
|