கட்டணம் வசூலிக்காத முன்பள்ளிகளில் ஆசிரியர்களுக்குக் கொடுப்பனவு வழங்கக் கவனம் செலுத்தப்பட்டுள் ளது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, September 22nd, 2020

எதிர்கால சந்ததியினர் கல்வியில் கைவிடப்படாமல் இருப் பதற்காக முன்பள்ளி முதல் உயர்கல்வி வரை அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கிய வகையில் திட்ட மொன்றைத் தயாரித்துச் செயற்படுத்துவதே அரசாங்கத் தின் முக்கிய குறிக்கோள் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குழந்தைப் பருவ வளர்ச்சியும் ஆரம்பக் கல்வியும் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டமாக கருதப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட் கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் ஆகியவற்றின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி கல்வியில் சரியான கவனம் அல்லது கட்டுப்பாடுகள் இதுவரை சரியான முறையில் கவனம் செல்லுத்தவில்லை . எனவே, குழந்தைகள் கல்வியில் நிபுணர் களின் உதவியுடன் முறையான திட்டம் தயாரிக் கப் பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் “ஒரு இலவச கல்விக்கான களத்தை அமைப்பதும், குழந் தையைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வதும் பெற்றோரின் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும்.

கட்டணம் வசூலிக்காத முன்பள்ளிகளில் ஆசிரியர்களுக்குக் கொடுப்பனவு வழங்கக் கவனம் செலுத்தப்பட்டுள் ளது.  மற்றொரு குறிக்கோள், அவர்களைச் சங்கடப்படுத் தாத வகையில் அவற்றை ஒழுங்குபடுத்திப் பயிற்சியளிப் பதாகும். முன்பள்ளிதிறன் மேம்பாட்டிற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை முன்பள்ளி குழந்தைகளு க்கு வழங்கவும் திட்டமிட்டோம் அத்துடன் நாட்டின் அனை த்து பாடசாலைகளின் வளங்களையும் கண்டறிந்து ஒழுங் காக நிர்வகிப்பதே அதிகாரிகளின் முதன்மை பொறுப்பு என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் பொறுப்பான அதிகாரிகள் அலுவலகங்களுடன் மட்டுப்படுத்தப்படாமல் பாடசாலைகளுக்குச் சென்று பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வுகளை வழங்க வேண்டும். அத்துடன், கல்வி அலுவலகங்களுக்குச் செல்லும் ஆசிரியர்களுக்குப் பதிலாக அதிகாரிகள் பாடசாலைகளுக்குச் சென்று ஆசிரியர் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு அமைப்பின் அவசி யத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பல்வேறு தொழில் தேவைகளுக்காக அலுவலகங்களுக் குச் செல்லும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங் களைப் பற்றி புலம்பியதோடு, ஆசிரியர் பிரச்சினை களைத் தீர்க்க அதிகாரிகள் உதவ வேண்டும் என ஸ்ரீலங் கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அனைத்து பாடசாலைகளின் குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளைக் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை பசில் வலியுறுத்தினார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளை சமூகமயமாக்கு வதற்காக அவர்களின் திறன்களை வளர்ப்பதற்காக மாவட்ட அளவில் சிறப்புக் கல்வி பிரிவுகளை அமைப் பதிலும் அரசு கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன், இதுபோன்ற குழந்தைகள் உள்ள குடும்பங் களின் உளவியல் மற்றும் பொருளாதார முறிவிலிருந்து அவர்களைக் காப்பாற்ற நிதி பங்களிப்பு செய்ய வேண் டும் என பசில் தெரிவித்தார்.

வகுப்பறையை விட்டு வெளியேறும் போது, தனது நாற் காலி மற்றும் மேசை சரியான இடத்தில் வைப்பது முதல் நாட்டையும் சமூகத்தையும் நேசிக்கும் மனப்பான்மை கொண்ட ஒரு குடிமகனாக மாற்ற கூடியவகையில் கல்வி வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: