கட்டட நிர்மாணத்தொழிற்துறையில் ஏற்படும் பின்னடைவைத் தவிர்க்க ஜனாதிபதியிடம் 13 முன்மொழிவுகள் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Monday, September 18th, 2023

கட்டட நிர்மாணத்தொழிற்துறையில் ஏற்படும் பின்னடைவைத் தவிர்ப்பதற்கு அவசியமான 13 முன்மொழிவுகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நிர்மாணத்துறை தொடர்பில் ஆராய அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையில் ஆறு குழுக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்தார்.

அந்தக் குழுக்களின் மூலம் யோசனைகள் கோரப்பட்டிருந்த நிலையில், அதற்காக 50 முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவற்றில் 13 அவசர முன்மொழிவுகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.  

அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில், நிர்மாணத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்தியானந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: