கட்சி மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு!
Tuesday, October 10th, 2023
கட்சி மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் இந்த அதிர்ச்சி எழுந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர், நசீர் அஹமட் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே விவசாய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சி மாறிய சிலர் அமைச்சுப் பதவிகளை வகித்து வருவதாகவும் அமைச்சுப் பதவிகள் மற்றும் உறுப்புரிமைகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் அவர்கள் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அதே பயம் உங்களுக்கு இல்லையா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, கட்சி மாறாததால், அவ்வாறான அச்சம் தமக்கு ஏற்படுவதற்கு காரணமில்லை எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


