கட்சியின் மக்களுக்கான பணிகள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்!
Tuesday, February 14th, 2017
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாகவும் வழிகாட்டலுக்கு அமைவாகவும் கடந்த காலங்களில் நாம் கிடைக்கப்பெற்ற அதிகாரங்களூடாக எமது மக்களுக்கு அளப்பரிய சேவைகளை செய்திருந்த போதிலும் அவற்றை மக்களிடம் கொண்டு செல்வதில் கட்சி தவறிவிட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடாக செயலாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (13.) இடம்பெற்ற நல்லூர் பிரதேசத்தின் வட்டார செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
தூரநோக்கும் தீர்க்கதரிசனமுமான சிந்தனையுடன் கடந்த காலங்களில் மக்களின் தேவைகளை அறிந்து கொண்டு நாம் பல்வேறு சேவைகளை செய்துள்ளோம். இருந்த போதிலும் இவ்வாறான சேவைகளை மக்கள் மயப்படுத்துவதில் கட்சி தவறிழைத்தது என்பதே யதார்த்தமானதாகும். எனவே எமது கட்சியின் கட்டமைப்புகளில் ஒன்றான பிரதேசங்கள் ரீதியாக உள்வாங்கப்பட்டுள்ள வட்டாரச் செயலாளர்கள் ஊடாக எமது சேவைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியமுள்ளது.
எதிர்காலங்களில் வட்டாரம், பிரதேசம், மாவட்டம், மாகாணம் என்ற அடிப்படையில் கட்சியின் வேலைத்திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன. அதை உணர்ந்து கொண்டவர்களாக அனைவரும் செயற்பட வேண்டும்.
கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா.வேலும்மயிலும் குகேந்திரன், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் , கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், கட்சியின் அலுவலக நிர்வாகச் செயலாளர் வசந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.


Related posts:
|
|
|


