கட்சித் தலைவர்களுடனான கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு !
Monday, February 8th, 2021
கட்சித் தலைவர்களுடனான அவசர கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்ச 10 அரசியற் கட்சி தலைவர்களுடன் விசேட கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தார்.
இந்த நிலையிலேயே பிரதமர் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
20 ஆவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியும் - சட்டமா அதிபர் அறிவிப்பு!
வடக்கில் கடந்த ஆறு வருடங்களில் இருபது இலட்சத்து 51 ஆயிரத்து 80 எண்பது சதுரமீற்றர் பரப்பளவிலிருந்து வ...
சிறார்கள் தொடர்பிலான சட்டத் திருத்தத்தை துரிதமாக அறிமுகப்படுத்தும் நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம...
|
|
|


