கடும் வறட்சி – வடக்கில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
Tuesday, June 18th, 2019
தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக வட மாகாணத்தில் 1,90,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் சுமார் 21,000 குடும்பங்களும் மன்னாரில் சுமார் 18,000 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் சுமார் 36,000 குடும்பங்களைச் சேர்ந்த 1,52,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4,47164 வரை அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆனையிறவு கடல் நீரேரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு 5ஆம் தர புலமைப்பரிசில்!
கொரோனாவை மறைக்க பொலிஸாருக்கு இலஞ்சம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சந்தேகம்!
பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ!
|
|
|


