கடும் வரட்சி: இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவு!

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் 36 அடியாக காணப்பட்ட இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தற்போது 9 அடியாக குறைவடைந்துள்ளது.
இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் நண்ணீர் மீன்பிடியில் ஈடுபடும் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கிளிநொச்சி குளத்தின் நீர்மட்டமும் வெகுவாக குறைவடைந்துள்ளதால் சிலபகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
பிற்போடப்பட்ட வழக்கு விசாரணை!
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இராணுவத் தளபதியின் ஆலோசனையின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படும்...
25 ஆம் திகதிமுதல் ஆசிரியர்கள் நிச்சயமாக சேவைக்கு சமுகமளிப்பர் - கல்வி அமைச்சின் செயலாளர் நம்பிக்கை!
|
|