கடும் எதிர்ப்பு – இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடைநிறுத்தம் – விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகம் அறிவிப்பு!

Tuesday, January 23rd, 2024

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.

இந்த சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்பட வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

மசோதா மீதான விவாதத்திற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் கிடைத்தன.

இதன்படி, மேலும் 33 வாக்குகள் மேலதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இணையத்தள அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்தாக அறிவிக்கப்பட்டது..

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இன்று நடைபெறவிருந்த இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடைநிறுத்தப்பட்டு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அதேவேளை இன்று நடைபெறவிருந்த வாய்மொழி கேள்விகள் மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: