கடலுக்கு சென்றவரை காணவில்லை!
Saturday, June 11th, 2016
வல்வெட்டித்துறை, பொலிகண்டிப் பகுதிக் கடலில் கடற்தொழிலுக்குச் சென்ற ஒருவர் காணாமற்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 09.06.2016 இரவு கடற்தொழிலுக்குச் சென்ற பொலிகண்டி கிழக்கு, நிலவன் குடியிருப்பு முகாமில் வசித்துவரும் பீற்றர் அன்ரனி ரஜிந்தன் (26 வயது) என்ற குடும்பஸ்தர் இதுவரை வீடு திரும்பவில்லையென வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கடற்தொழிலாளர் காணாமற் போனமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடதாசி தட்டுப்பாடு - ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் முறைப்படுத்த முடிவு - போக்குவரத்து அமைச்சர் தி...
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு தொடர்ந்தும் உதவி - இலங்கையிடம் அமெரிக்கா உறுதியளிப்பு!
கடன் விவகாரங்களில் இலங்கை அதிகாரிகளின் முன்னேற்றத்தை வரவேற்கின்றேன் - சர்வதேச நாணய நிதியத்தின் முகாம...
|
|
|


