கடலுக்கு சென்றவரை காணவில்லை!
Saturday, June 11th, 2016
வல்வெட்டித்துறை, பொலிகண்டிப் பகுதிக் கடலில் கடற்தொழிலுக்குச் சென்ற ஒருவர் காணாமற்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 09.06.2016 இரவு கடற்தொழிலுக்குச் சென்ற பொலிகண்டி கிழக்கு, நிலவன் குடியிருப்பு முகாமில் வசித்துவரும் பீற்றர் அன்ரனி ரஜிந்தன் (26 வயது) என்ற குடும்பஸ்தர் இதுவரை வீடு திரும்பவில்லையென வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கடற்தொழிலாளர் காணாமற் போனமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழிலுக்காக சென்றுள்ள மேலும் சிலர் குறித்து தகவல்கள் இல்லை!
வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்...
பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் - பாடப் புத்த...
|
|
|


