கடலுக்கு அடியில் பாரிய எரிமலை வெடிப்பு: டொங்கா – நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை!

கடலுக்கு அடியில் ஏற்பட்ட பாரிய எரிமலை வெடிப்பு காரணமாக டொங்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொங்காவிலுள்ள பல வீடுகள் உள்ளிட்ட கட்டட தொகுதிகளுக்குள் கடல் நீர் நுழையும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
அந்த நாட்டு தலைநகரில் கடலில் இருந்து சாம்பல் வெளியேறுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசுபிக் தீவுகளில் வாழ்பவர்களை உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்க சமோவா பகுதிக்கும் அமெரிக்கா ஆழிப்பேரலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
Related posts:
சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் உண்மையானவையல்ல - இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமச...
அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் - இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய...
உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் நாளை இலங்கை வருகை !
|
|