கடலில் காணாமல்போன இரு மீனவர்கள் மாலைதீவு கடற்படையினரால் மீட்பு!
Thursday, January 5th, 2017
இலங்கையில் காணாமல் போயிருந்த மீனவர் இருவர் நேற்று மாலைதீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் என அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகாளர் சங்க தலைவர் எம்.எஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.
கல்முனையிலிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆறு பேர் காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில் குறித்த ஆறு பேரில் இருவர் நேற்று மாலை மாலைதீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். ஹாஜா மொஹைதீன், முஹமட் அர்ஜீல் ஆகியோர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகாளர் சங்க தலைவர் எம்.எஸ் நஸீர் தெரிவித்தார்.

Related posts:
மாகாணசபை முறை அபிவிருத்திக்கு தடையான ஒரு பயனற்ற முறை - பிரதியமைச்சர் நிரோஷன் பெரேரா!
இலங்கையின் முன்னேற்றத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம்!
அதிக விலைக்கு சிமெந்து மூடைகளை விற்பனை செய்பவர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கை - நுகர்வோர் விவகார ...
|
|
|


