கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் முயற்சி – சீன அரசினால் வழங்கப்பட்ட அரிசிப் பொதிகள் வேலணை பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு வழங்கிவைப்பு!

Wednesday, July 24th, 2024

வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி பொதிகளின் மற்றுமொரு தொகுதி இன்றையதினம் (24.07.2024) வேலணை பிரதேச செயலர் பிரிவில்  வழங்கிவைக்கப்பட்டன.

இதனடிப்படையில் குறித்த அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வுகள் வேலணை  பிரதேச செயலர் பிரிவிலுள்ள மண்டைதீவு பகுதியில் குறித்த பகுதி கடற் தொழில் சங்க அங்கத்துவ குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது

இதனையடுத்து வேலணை பிரதேச கடற் தொழில் சங்க அங்கத்துவ குடும்பங்களுக்கான அரிசிப் பொதிகள் வழங்கும் நிகழ்வு துறையூர் பகுதியிலும் புங்குடுதீவு பகுதி கடற் தொழில் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குடும்பங்களுக்கு புங்குடுதீவிலும் வழங்கிவைக்கப்பட்டன.

முன்பதாக கடந்த 12.07.2024 அன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த பிரதமர் தினேஸ் குணவர்த்தன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு, சம்பிரதாயபூர்வமாக குறித்த அரிசி பொதிகளை பயனாளர்களுக்கு வழங்கிவைத்திருந்தனர்.

இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவித்திட்டங்களை கோரியிருந்தார். இந்நிலையில் சீன அரசு 1500 மில்லியன் நிதியை வழங்க முன்வந்திருந்தது.

குறிப்பாக நாட்டில் 15 கடற்றொழில் மாவட்டங்கள் உள்ள நிலையில் வடக்கு கிழக்கின் கடற்றொழில் சார் மக்களின் நலன்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்த சீன அரசு இணங்கியிருந்தது.

அதனடிப்படையில் சீன அரசின் 1500 மில்லியன் உதவித்திட்டத்தின் கீழ்  500 மில்லியன் நிதியில் அரிசி பொதிகளும் 500 மில்லியன் நிதியில் வீட்டுத்திட்டமும்  500 மில்லியனுக்கு வலையும்  வழங்கப்பட ஏற்பாடகள் முன்னெடுக்கப்படுக்கின்றன

அதன் ஒரு பகுதியாகவே இன்று குறித்த அரிசிப் பொதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேலணை பிரதேச ஒருங்கிணைப்பாளர்களின் பிரன்னத்துடன் துறைசார் அதிகாரிகளால் செயலர் பிரிவு கடற் தொழில் சங்க அங்கத்துவ குடும்பங்களுக்கு தலா 20 கிலோ வீதம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை தயாரித்தவர் சட்டம் பற்றி அறியாதவர் -அமைச்சர் ராஜித்த!
ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாதோருக்கு நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை!
கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களுக்கு இலங்கை த...