கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் – விமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக விமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

அதேநேரம் களுத்துறையிலிருந்து காலி வரையான கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுடும் என்றும் அதேபோன்று புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: