கடமை நேரம் போதையில் இருந்தால் உடனடியாகப் பதவி நீக்கப்படுவர்!

Wednesday, February 20th, 2019

இ.போ.ச  ஊழியர்கள் மதுபோதையில் காணப்பட்டால் அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். இ.போ.ச வேலைத்தளம் கோவிலைப் போன்றது. கடமையில் இருக்கும் ஊழியர்கள் மிக ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

வடக்கு இ.போ.ச ஊழியர்கள் குறித்து சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடமையின் போது ஊழியர்கள் மது அருந்தி இருப்பது கண்டுபிடித்தால் பதவியில் இருந்து விலக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் ஒழுக்கமாகவும் பண்பாகவும் நடந்து கொள்வதுடன் வேலைத்தளத்தை கோவில் போல பேண வேண்டும்.

ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி இ.போ.சபையின் வருமானத்தை அதிகரித்துத்தர வேண்டும். தற்போது இங்கு 38 லட்சமே வருமானமாக கிடைக்கின்றது.

இவ்வருமானம் 45 இலட்சமாக அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென விமானப் போக்குவரத்துச் சுற்றலாத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts:


எழுத்து மூலம் அறிவிக்கப்படுமாயின் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பய...
இரு வாரங்களில் வழமைக்கு திரும்பும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு...
2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை - தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவ...