கடமைகளை பொறுப்பேற்ற வடக்கின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண!
Wednesday, April 24th, 2024வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண இன்றையதினம்(24) சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக இருந்த, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தனது பொறுப்புக்களை புதிய பணிப்பாளர் பத்திரணவிடம் கையளித்தார்.
இதன்போது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் உள்ளிட்ட சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இணைப்பாட விதானச் செயற்பாடு மாணவரைச் சாதனையாளராக்கும்!
சின்னக் கலைவாணர் விவேக்கின் மரணம்!
நாளைமுதல் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அத்தியாவசிய பொருள் நடமாடும் சேவை - முழுமையான பொறுப்பு மாவ...
|
|