இணைப்பாட விதானச் செயற்பாடு மாணவரைச் சாதனையாளராக்கும்!

Saturday, January 26th, 2019

சிறு வயதில் வழங்கப்படும் கற்றல் நடவடிக்கைகள் மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகள் மூலம் எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்த சாதனையாளர்களாக உருவாக்க முடியும் என்று தென்மராட்சிக் கல்வி வலய ஆரம்பக் கல்வி சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

கிராமப்புற பாடசாலைகளில் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் சிறப்பாகச் செயற்பட்ட பலர் இன்றும் எம் மத்தியில் உயர்வான நிலையில் இருப்பதைக் காண்கிறோம். பாடசாலைகளில் மாணவர்களின் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் பொறுப்பான ஆசிரியர்கள் மாணவர்களின் நலன்களில் அக்கறை செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு கல்வி வலயத்திலும் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கென தனியான அலகுகள் ஆரம்பிக்கப்பட்டு அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியிலும் போட்டிகளிலும் சிறந்து விளங்குவதைக் காணமுடிகின்றது.

கிராமப்புற பாடசாலைகளில் வழங்கப்படும் கல்வி விளையாட்டு ஊக்குவிப்பு மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும். இன்றைய காலத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்களை நோக்கும்போது அவர்கள் கிராமப்புற பாடசாலைகளில் கற்று இடைநிலை மற்றும் உயர்தர வகுப்புக்களை வேறு பாடசாலைகளில் கற்று முன்னிலையடைந்துள்ளனர். அவ்வாறு அவர்கள் உயர்வடைவதற்கு கிராமப்புற பாடசாலைகளே அடித்தளமிட்டன என்பதை மறக்க முடியாது.

Related posts: