கடன் மறுசீரமைப்பு விவகாரம் – சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு இலங்கைக்கு விஜயம்!
Thursday, May 11th, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில், இலங்கையின் கடன் வழங்குநர் நாடுகள், இணையம் மூலம் சந்திப்பு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் நடத்திய நிலையில் வழக்கமான ஆலோசனைகளுக்கு அமைவாக சர்வதேச நாணய நிதியத்தின், பணியாளர்கள் குழுவொன்று இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
குறித்த குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் பிற்பகுதியின், முதலாவது மீளாய்வு பணிக்கு முன்னதாக, இலங்கையுடனான வழமையான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைய உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் இந்த பயணத்தில் பங்கேற்கிறார்.
இதேவேளை, கடன் மறுசீரமைப்பு தொடர்பில், இலங்கையின் கடன் வழங்குநர் நாடுகள், இணையம் மூலம் சந்திப்பு ஒன்றை நடத்திய நிலையில் அதில் சீனா பார்வையாளராக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


