கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கோ தனிநபர் வைப்புக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது – நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
Thursday, June 29th, 2023
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கோ, செலுத்தப்படும் வட்டித்தொகைக்கோ அல்லது தனிநபர் வைப்புக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஊடகவியளாலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது –
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கோ, செலுத்தப்படும் வட்டித்தொகைக்கோ அல்லது தனிநபர் வைப்புக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது எந்தவொரு தரப்பினருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதனை மத்திய வங்கி சார்பாகவும், அரசாங்கம் என்ற வகையிலும் எம்மால் உறுதியாக கூற முடியும்.
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாடு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளமைக்கு ஏற்ப அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பிரசாரங்கள் தோல்வியடைந்துள்ளது என்பதனை புரிந்து கொண்டு அரசாங்கத்துக்கு எதிராகவும், அவர்களின் அரசியல் தேவைகளுக்காகவும் இவ்வாறு கூச்சல் போடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


