கடன் நெருக்கடி: இந்தியாவின் மற்றுமொரு பிரேரணையால் இலங்கை பயனடையும் என எதிர்பார்ப்பு!
Sunday, February 19th, 2023
ஜி-20 மாநாடு அடுத்த வாரம் கூடும் போது முன்வைக்கப்படும் இந்தியாவின் மற்றுமொரு பிரேரணையால் இலங்கை பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவ ஜி20 நாடுகளுக்கு இந்திய அரசாங்கம் ஒரு திட்டத்தை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 20 நாடுகள் கொண்ட குழுவைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி தலைவர்கள் அடுத்த வாரம் பெங்களூரில் சந்திக்க உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை கொண்ட குழுவான ஜி 20 ற்கு இம்முறை இந்தியா தலைமை தங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தூதுரகத்தை மூடும் முடிவை நைஜீரியா மறுபரிசீலனை செய்யும் - ஜனாதிபதி புஹாரி !
நாட்டை பாதிக்கும் காலநிலை மற்றும் வானிலைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஜனாதிபதியின் “காலநிலை செழுமைத...
புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை - அம...
|
|
|


