கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் அதிகரிப்பு

2017 ஜீலை 1ஆம் திகதியிலிருந்து அனைத்து வர்த்தக வங்கிகளும் அவற்றின் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 20 வீதம் வரையில் அதிகரித்துள்ளன.
மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கான கடன் வழங்கள் மற்றும் கடன் அட்டைகள் பற்றி அண்மையில் வெளியிட்டுள்ள கடன் சம்பந்தப்பட்ட இலக்கம் 2 சுற்றறிக்கையில் வர்த்தக வங்கிகளால் வழங்கப்படும் கடன்கள் மற்றும் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதங்கள் ஜீலை 1ஆம் திகதியிலிருந்து, அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே அனைத்து வர்த்தக வங்கிகளும் அவற்றின் வாடிக்கையாளர் கடன் அட்டைகள், மேலதிகப் பற்றுகள் மற்றும் கடன்களுக்கான வட்டி வீதங்களை 2017 ஜீலை 1ஆம் திகதியிலிருந்து அதிகரித்துள்ளன.
இவ்வாறு கடந்த 1 ஆம் திகதிக்கு முன்னர் 24 வீதமாகவிருந்த கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 28 வீதம் வரையில் வர்த்தக வங்கிகள் அதிகரித்துள்ளதுடன், ஏனைய மேலதிகப் பற்றுக்களுக்கான வட்டியும் 28 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 2017 ஜீலை 1ஆம் திகதிக்கு முன் 16 வீதமாகவிருந்த வீடமைப்புக் கடன்களுக்கான வட்டியம் அதிகரிக்கப்படவுள்ளனதுடன், ஏனைய குத்தகைகள், கடன்கள், அடகுக் கடன்கள், மற்றும் நுண் நிதிக் கடன்களுக்கான வட்டி வீதங்களும் மேற்படி மதம்திய வங்கியின் சுற்றறிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும் வர்த்தக வங்கிகள் அவற்றின் வங்கிக் கட்டமைப்பு, வர்த்தக செயற்பாடுகள், வங்கிகள் மற்றும் செலவினங்களுக்கு ஏற்ப வாடிக்கையாளருக்கு வட்டி வீத அதிகரிப்பைத் தீர்மானிக்க முடியும் எனவும் மேற்படி சுற்றறிக்கையில் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Related posts:
|
|