கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிருங்கள் – அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்து!
Tuesday, January 31st, 2023
கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்.
இந்த வருடம் ஜனவரி மாதம் அரச வருமானம் செலவு மதிப்பீட்டை விடக் குறைவாக இருப்பதால் அரச செலவீனங்களைக் குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வருமானம் அனைத்து செலவுகளுக்கும் போதாது எனவும், சம்பளம் மற்றும் ஓய்வூதியம், நலன்புரி, மருந்துகள் மற்றும் கடன் சேவைகளை மட்டுமே ஈடுசெய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரச நிறுவனங்களுக்கு கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்குமாறும், அவர்களின் செலவுகளுக்கு அவர்களே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


