கடந்த 24 மணி நேரத்தில் 1,766 பயணிகள் இலங்கை வருகை!

கடந்த 24 மணிநேரத்தில் விமானங்களின் ஊடாக 1,766 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காலப்பகுதிக்குள் 17 சரக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், 12 விமானங்களின் ஊடாக 741 பேர் கட்டார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளை நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர, கடந்த 24 மணிநேரத்தில் 148 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - பொதுமக்களிடம் கொரோனா செ...
எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதிமுதல் 11 ஆம் திகதிவரை கூடுகிறது நாடாளுமன்றம்!
வடக்கு காசா பகுதிக்கான உணவு விநியோகத்தை நிறுத்த உலக உணவு திட்டம் முடிவு!
|
|