கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 42 பேர் உட்பட வடக்கில் 50 தொற்றாளர்கள் நேற்று அடையாளம்!
Wednesday, August 4th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தில் 42 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 50 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று 168 மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில், யாழ். போதனா மருத்துவமனையில் 17 பேர், தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 10 பேர், மானிப்பாய் பிரதேச மருத்துவமனையில் 9 பேர், உடு வில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேர் என யாழ். மாவட்டத்தில் 42 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதேபோன்று மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் 6 பேரும், கிளிநொச்சி தருமபுரம் பிரதேச மருத்துவமனையில் ஒருவரும், முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் ஒருவரும் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.
சுத்திகரிப்பு பணிகள் காரணமாக நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


