கடந்த 24 மணிநேரத்தில் 1,270 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!
Friday, July 9th, 2021
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்த 270 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் ஆயிரத்து 223 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவானதுடன், 47 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.
இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 69 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரை 2 இலட்சத்து 39 ஆயிரத்து 584 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 27 ஆயிரத்து 11 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நிதி வைப்பீடு!
சுகயீனமுற்றிருந்த பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கொரோனா தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை பலன...
வேலணையில் சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நாகர்கால மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!
|
|
|


