கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,561 பேர் கைது!
Thursday, June 17th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய ஆயிரத்து 561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச ஊழியர்களுக்கு 23 ஆம் திகதி சம்பளம் - பிரதமர் நிதி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை!
கொரோனா தொற்று தொடர்பில் யாழ் மாவட்டம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தொடர்ந்தும் அபாயம் உள்ளது – மாவட்ட...
பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை - அவுஸ்ரேலியா முக்கிய கலந்துரையாடல்!
|
|
|


