கடந்த 2 ஆண்டுகளை விட இவ்வாண்டு டெங்கு நோயின் பரவல் தீவிரமடைந்துள்ளது – எச்சரிக்கை விடுத்துள்ளது அரச மருத்து அதிகாரிகள் சங்கம் !
Friday, November 4th, 2022
கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின், ஊடகக்குழு மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் வைத்திய வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜுன் மாத்தில் டெங்கு பரவல் மிகத் தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் குறித்த காலப்பகுதியில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் சுத்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, டெங்கு பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்..
எவ்வாறாயினும், தற்போது மழைக்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், டெங்கு நோய் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது. டெங்கு நோயின் பெருக்கத்தை அளவிடுவதற்கு பிரிட்டோ குறிகாட்டி பயன்படுத்தப்படுகிறது.
இதனடிப்படையில் மேல் மாகாணத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வில், அந்த அளவு 5 மடங்காக அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 100 வீடுகளுள் 20 வீடுகளில் நுளம்பு பெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பின் அவர்களை வைத்தியசாலைகளின் அனுமதிக்கூடிய இடவசதி பற்றாக்குறையாகக்கூடும்.
எனவே, சுற்றுச்சூழலை தூய்மையாக்கி, டெங்கு பரவல் அதிகரிப்பதை தவிர்க்குமாறு வைத்தியர் மேலும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


