கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!
Friday, July 5th, 2024
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 269 டெங்கு நோயார்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 146 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், கண்டி மாவட்டத்திலிருந்து 93 டெங்கு நோயாளர்கள் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 28,239 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ் முயற்சியாளர் விற்பனைக் கண்காட்சி!
பொருத்தமான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கை - சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியார...
பொருளாதார சீர்திருத்தங்களை பொருட்படுத்தாது குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்...
|
|
|


