கடந்த வருடத்தில் மாத்திரம் 24 சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பில் உயிரிழப்பு – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல்!

Friday, April 5th, 2024

கடந்த வருடத்தில் மாத்திரம் 24 சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைத்து உயிரிழந்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை மீட்பதற்காக இரகசிய இடங்களுக்கு சந்தேகநபர்களை அழைத்துச் செல்லும் போது பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை அதிகளவில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தடுப்பு காவலில் உள்ள சந்தேகநபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் கடமை என்றும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டில் மாத்திரம் பொலிசாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 9,417 பொது முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 44 முறைப்பாடுகள் யுக்திய நடவடிக்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அடுத்த வரவு செலவுத்திட்டம் புதுமைகள் அடங்கியதாக அமையும் - நிதி அமைச்சர்  ரவி கருணாநாயக்க!
பொதுமக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்களில் அவசர ...
நாடு முன்னோக்கி நகர்வதற்கு அரசியல் ஐக்கியம் அவசியம் – ஐக்கியத்துக்காக அமைச்சு பதவியையும் துறக்க தயார...