கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிடுவது தனிப்பட்ட ஆதாயங்களை இலக்காகக் கொண்டது – இலங்கை சுட்டிக்காட்டு!
Thursday, July 27th, 2023
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 23 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் என்ற கூற்றினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இலங்கையில் கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிடுவது தனிப்பட்ட ஆதாயங்களை இலக்காகக் கொண்டது எனறும் கூறியுள்ளது.
மேலும் இது இன நல்லிணக்கத்திற்கு உகந்ததல்ல என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து சமூகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பாரம்பரியத்தை கொண்ட சமூகங்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரு நாள் சேவை இன்று முன்னெடுக்கப்பட மாட்டாது!
மின் இணைப்பின் போது செலுத்தும் காப்பு வைப்பு பணத்திற்கு வட்டி!
ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் யுகம் இதற்...
|
|
|


