கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் பத்து இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிப்பு – காமினி வலேபொட தெரிவிப்பு!
Saturday, February 24th, 2024
கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் பத்து இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்கள், தமது குழுவின் முன் அழைக்கப்பட்ட போது இது தெரியவந்ததாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் துண்டிக்கப்பட்ட இணைப்புகளை உடனடியாக மீள வழங்குமாறும், மின்சாரக் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் முறைமையை நடைமுறைப்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் வலேபொட இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மீளிணைப்புக் கட்டணத்தை வசூலிக்காமல் இணைப்புகளை வழங்க வேண்டும் என்றும், மறு இணைப்புக் கட்டணத்தை தவணை முறையிலும் வசூலிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வதந்தி பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
ஒரு டொலருக்கு கீழ் சென்ற கச்சா எண்ணெயின் விலை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - எவரும் தப்பமுடியாது - நிச்சயம் நீதி கிடைக்கும் என அமைச்சர் விஜயதாச ராஜபக...
|
|
|


