கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட வீதி விபத்துகளால்45 பேர் பலி – 266 பேர் படுகாயம்!

Tuesday, February 9th, 2021

இலங்கையில் கடந்த வாரத்தில் மட்டும் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன் 266 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு காயமடைந்த 266 பேரில் 94 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

குறிப்பாக கண்டி, பம்பகா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே கடந்த ஜனவரி 31 ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 403 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் இயந்திரங்களாக மாறியுள்ளது வங்காள விரிகுடா பிராந்திய பொருளாதாரங்கள...
பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் - நிதியமைச்சர் அ...
கிழக்கு அபிவிருத்தித் திட்டம் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல...