கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் 531 பேர் கைது – பொலிஸார் தெரிவிப்பு!
Saturday, February 24th, 2024
கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சந்தேகநபர்களுக்கு நீதிமன்றங்களினால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 301 நபர்களும், சாதாரண பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 230 நபர்களுமே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்ப்படுத்தப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தோழர் மகேஸ்வரனின் தாயார் செங்கமலம் தம்பிப்பிள்ளை காலமானார்!
இன்று நள்ளிரவு அமுலுக்குவரும் தடை - மீறினால் நடவடிக்கை!
நாட்டின் பாதுகாப்பு இராணுவத்திடம் மட்டுமன்றி உணவு - பொருளாதார பாதுகாப்பிலும் தங்கியுள்ளது – ஜனாதிபதி...
|
|
|


