கடந்த ஆண்டு மது விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது – கலால் திணைக்களம் தெரிவிப்பு!
Saturday, January 7th, 2023
வரி அதிகரிப்பு மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம் மதுபான விற்பனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை கலால் திணைக்களத்தின் பேச்சாளரும், வருமான நடவடிக்கை பிரிவின் மேலதிக கலால் ஆணையாளருமான கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான கலால் வருமானம் 140 பில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், கடந்த வருடம் கலால் வருமானம் 170 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இராணுவ பிரிகேடியர்கள் 9 பேருக்கு பதவி உயர்வு!
கனகராயன் குளத்தில் அதிகாலை கோர விபத்து - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உ...
அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்தப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
|
|
|


