கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை பூரணப்படுத்தப்படாதுள்ள வீடுகளை முழுமையாக்க நடவடிக்கை!

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு பூரணமாக நிதி வழங்கப்படாமையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் கருதி, குறித்த வீடுகளுக்கான மீதித் தொகையை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளதாக வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வீடமைப்பு திடடங்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட காணிகளில் அமைக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எஞ்சிய தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஓய்வுபெறுவதற்கு இணையத்தளம் மூலம் இன்று முதல் பதிவு மேற்கொள்ளலாம்!
ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து - தபால் திணைக்களம்!
மின் உற்பத்திக்கு டீசல் வழங்க முன்னுரிமை - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
|
|
விரைவில் மாகாணசபை தேர்தல் - ஆளும் தரப்பு கட்சிகளின் தலைவர்களுடன் அவசர சந்திப்புக்கு ஜனாதிபதி ஏற்பாடு...
வெளிநாடுகளில் இருந்து சட்டரீதியாக பணம் அனுப்பும் இலங்கையர்களுக்கு வாகனம் வாங்க வரிச்சலுகை - வெளிநாட்...
வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும் - அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல...