ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
Wednesday, January 10th, 2024
ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இது ஓய்வூதியர்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி என தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஓய்வூதிய உதவித்தொகை வழங்குவதில் நாங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டோம்இ இது பல ஆண்டுகளாக தாமதமாகி வருகிறது. நெருக்கடியைத் தணிக்க நிதி அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சகம் இடையே நீண்ட விவாதம் இடமபெற்றது.
இதனை அடுத்து நாங்கள் பணிகளைத் தொடங்க முடிந்தது. அதன்படி 2023 டிசம்பர் மாதத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை நிதி அமைச்சு வெளியிட்டது. இது ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மண்ணுலகில் இருந்து விடைப் பெற்றார் முதல்வர் ஜெயலலிதா!
வளலாய் அமெரிக்கன் மிஷன் முன்பள்ளிக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!
நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணம் உயர்வு!
|
|
|


