ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு!
Wednesday, February 13th, 2019
ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் அண்மையில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வெளியிட்ட கருத்துக்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படும் எனவும் கல்வி அமைச்சர் கூறியிருந்தார்.
இதற்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர், தமது சங்கம் அதற்கு எதிர்ப்பை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
ஆசிரியர்களுக்காக பரீட்சை எழுதி சித்தி பெற்ற 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது வேலையற்றுள்ளனர். இந்நிலையில், அமைச்சர் இவ்வாறான ஒரு முடிவை எடுப்பது சிறந்தது அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மீண்டும் சார்ள்ஸ்!
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!
பொருளாதார நெருக்கடி - இலங்கையில் அதிகரிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை - மத்திய வங்க...
|
|
|


