ஒரு வாரத்தில் சுங்கத்த திணைக்களத்திற்கு 9 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் – சுங்கத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு!

கடந்த ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து கடந்த 3 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் இறக்குமதி வரி வருமானமாக 9.34 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் சுங்கத் திணைக்களத்தால் அனுமதியளிக்கப்பட்ட ஏற்றுமதிகளின் பெறுமதி 46.43 பில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் சுங்கத்திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுதத் டி சில்வா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சுங்கத்தினரின் கடமைகளில் கணிசமானளவு பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் சுங்கத் திணைக்களம் கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, தொடர்ந்தும் தமது சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வித்தியாவின் ஊரிலுள்ள குடும்பங்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிவான் பணிப்பு!
போராட்டத்திற்கு தயாராகும் மருத்துவ உதவியாளர்கள்!
தேசிய மறுசீரமைப்பு பொறிமுறை அறிக்கை இம்மாதம் சமர்ப்பிப்பு!
|
|