ஒரு பில்லியன் டொலர் இந்தியக் கடன் வசதியை நீடிக்க பேச்சுவார்த்தை – ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவிப்பு!
Wednesday, March 8th, 2023
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கைக்கான உறுதிப்பாடு எட்டப்படுகின்ற நிலையில், ஒரு பில்லியன் டொலர் இந்தியக் கடன் வசதியை நீடிப்பதற்காக, இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
தற்போதைய கடன் வசதி, மார்ச் 17 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையிலேயே புதிய கடன் வசதிக்கான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இதுவரையில், இந்திய கடன் வசதியில் இலங்கையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்தே ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியை சில மாதங்களுக்கு நீடிக்க இலங்கை இந்தியாவுடன், இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியது இலங்கை!
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டம் - ஐ.நாவின் 42 ஆவது அமர்வில் அமைச்சர் அலி...
புதிய வாக்காளர்களின் பெயர் பட்டியலின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எம்.பிக்கள் - தேர்தல்க...
|
|
|


